சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்!
சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
அதன் போதே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை கச்சதீவு அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், மேலதிக செயலர்களான ம.பிரதீபன், எஸ்.முரளிதரன்(காணி), திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படையினர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை