சுகாதார அமைச்சர் பதவி ஏற்கத் தயார்! ராஜித அதிரடி அறிவிப்பு

சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில் –

எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டை தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல, உணவுதான் என கூறியுள்ளார்.

மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​எந்தவொரு அரசாங்கமும் தனது எதிர்கால நலன் கருதி அமைச்சர்களை நியமிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.