இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1.7 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு பெப்ரவரி மாத முதல் வாரத்தில் 23.5 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, அந்நிய செலாவணி கையிருப்பு 400 டொலர்களால் உயர்வடைந்துள்ளதாகவும் தற்பொழுது 2.1 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு பணவீக்கம் கடந்த செப்ரெம்பர் மாதம் 94.9 வீதமாக காணப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 60.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 29 ஆயிரத்து 802 ஆகக் காணப்பட்டதாகவும் இந்த ஆண்டில் அந்த தொகை 261 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது எனவும் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார தீர்மானங்களின் காரணமாக இந்த சாதகமான மாற்றம் நாட்டில் பதிவாகியுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை