எதற்காகவும் யாரும் பயப்படவேண்டாம் இந்திய கடற்றொழிலாளரை பிடியுங்கள்! அமைச்சர் டக்ளஸ் அதிரடி
வட பகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் மீனவர்கள் அவர்களை பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ‘நான் ஏற்கனவே மீனவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கடலில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை பிடியுங்கள். பிரச்சினைகளை கையாள்வதற்கு நான் இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை