நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் சிக்கியுள்ளது – கல்முனை மாநகர சபை முதல்வர்

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை பொதுமண்டபத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கருத்து தெரிவிக்கையில் –

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கமைய ஆணையாளர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நிதிகையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.