காலி முகத்திடல் கடல் ஆமைகள் முட்டையிடும் போக்கு அதிகரிப்பு -வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்!

இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி முகத்திடல் பசுமைக் கரையோரப் பகுதிகளில் அதிகளவான கடல் ஆமைகள் முட்டையிடுகின்றன என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடலோரப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இருப்பினும், காலி முகத்திடல் பசுமைக் கரையோரப் பகுதியில் தற்போது முட்டையிடும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் புதைக்கப்பட்டிருக்கலாம்.

இதேவேளை, இலங்கையில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று வேட்டைக்காரர்களாவர், அவர்கள் முட்டைகளை தவறாகக் கையாளுகிறார்கள்,

இந்நிலையில், வளமாகக் கருதப்படும் முட்டைகளைப் பாதுகாக்கும் திட்டத்தை வனவிலங்கு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.