கடத்த முயன்ற ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகள் புத்தளம் – கற்பிட்டியில் பறிமுதல்

புத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பகுதியில் இன்று (03) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட  கண்காணிப்பு நடவடிக்கைகளின்  போது ஆயிரத்து 111 கிலோ  பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பீடி இலைகளை கடத்துவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கண்டகுடா பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது பீடி இலைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பீடி இலைகள் மற்றும் ஏற்றுவதற்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதாக விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

35 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்த சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,  சுமார் 2 கோடி ரூபாவிற்கும் பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிப்பர் வாகனம் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக கற்பிட்டி பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகள் தொடர்தும் கடத்தப்பட்டு வருவதாக விஜய கடற்படைப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.