யாழ்.போதனாவில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
கடந்த 28ஆம் திகதி 49 சேகரிப்பும் , 49 வழங்கலும் இடம்பெற்றுள்ளது. 1ஆம் திகதி 17 சேகரிப்பும் 48 வழங்கலும் இடம்பெற்றுள்ளது. 2ஆம் திகதி 33 சேகரிப்பும் 39 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.
குறித்த புள்ளி விபரத்தின் படி சேகரிப்பை விட வழங்கல் கூடுதலாக காணப்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பவர்கள் தமது 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை