மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை கடல் முக வீதியில் உள்ள பிரபல பெரும்பான்மையின கலவன் பாடசாலைக்கு முன்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதி ஒன்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி பகுதி மக்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலை சமூகத்தினர் ஒன்றிணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த விடுதிக்கு 100 மீற்றர் தூரத்தினுள் ஆலயம் மற்றும் பாடசாலை அமைந்திருக்க எவ்வாறு மதுபான சாலை திறப்பதற்கு அரச அதிகாரிகள் அனுமதிக்க முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேற்படி விடுதியில் மது பானம் விற்பனை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வீதியை மறித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு மதுபான விற்பனை நிறுத்தப்படாவிடின் தாம் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திலும் இறங்கத் தயாராக இருப்பதாக இதன் பொது கருத்து தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை