சிங்கப்பூரில் உலக சம்பியன்ஷிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார்.
மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்த உடற்கட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் 163 செ.மீ உயரம் பிரிவில் ‘ஸ்போர்ட்ஸ் மாடல்’ பிரிவில் பங்கேற்று, அந்த நிகழ்வில் தங்கப் பதக்கத்தையும், ஒட்டுமொத்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையையும் வென்றுள்ளார்.
இந்த சாதனைகளுடன் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.55 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யு.எல்-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது அவரை வரவேற்க அவரது தந்தை, தாய் மற்றும் உடன்பிறந்தவர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வந்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை