கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மருந்துகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்துகள் தொடர்பில், முக்கிய அறிவிப்பொன்றை அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதாவது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது வரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசியமான மருந்துகள், இரண்டு மாதங்களுக்கு அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலும், தேவையான அளவு உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 130 ஆயர்வேத மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர் அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.