அரசாங்கமும் – தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றக்கூடாது: செல்வம் எம்.பி
அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும் அல்லது இறுதி முடிவை 9 ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை