உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில்!
உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், உடற் திணிவுச் சுட்டி அளவிடல், உடற்பயிற்சியின் நண்மைகள் போன்றவை தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகள், தெளிவூட்டல்கள் போன்றவற்றை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் வழங்கிவருகின்றார்கள்.
‘உடற்பருமன் பற்றிக் கதைப்போம்’ என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரையும் பங்குகொண்டு பயன்பெற்று ஆரோக்கியமாக வாழுமாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை