மக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் தமது வாழ்வாதாரத்தை வெற்றிகரமாகத் தொடர்வதற்கான சூழலை உருவாக்க விரும்புகின்றனர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் –
வடக்கில் நிலவும் நிலைமையை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். கடந்த பல ஆண்டுகளாகத் தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. அவர்கள் வாழ்வாதாரத்தைத் தொடர கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, இளைஞர்கள் தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் வைத்தியசாலைகள் செயற்படுகின்றன.
மக்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், இந்தப் பிரிவினை மேலும் மோசமாகி வடக்கில் உள்ள தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்.
தற்போது வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் அரசியல் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் பேசுகின்றனர்.
எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் தமது வாழ்வாதாரத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கான சூழலை உருவாக்க விரும்புகின்றனர். மக்கள் தங்கள் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை