உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ரூ.18 கோடியே 60 லட்சம் அரச கணக்கில் வைப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 80 ஆயிரத்து 720 வேட்பாளர்களின் கட்டுப்பணமாக பெறப்பட்ட 18 கோடியே 60 லட்சம் ரூபா அரசாங்கக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் கையளிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு பிணை பணத்தை செலுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைக்குத் தீர்வு காணும் வரை பிணைத் தொகையை அரசாங்கத்தின் கணக்கில் வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களுக்காக 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் பணம் இவ்வாறு வைப்பு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை