அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிவாரணம் வழங்க முடியாத நிலை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக, தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அரச பணியாளர்கள் சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்பதால், குறித்த வேட்பாளர்களில் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

தேர்தல் செயல்முறை தொடர்வதன் காரணமாக அவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ள போதும், இந்த வேட்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.