தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் – உதய கம்மன்பில
தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் என்றும் எவ்வாறாயினும் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேர்தல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான தடை விதித்துள்ள நிலையில் உரிமையை வென்றெடுக்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் தோற்றம் பெற்ற தமிழருக்கு எதிராக இனக் கலவரம், வன்முறை மற்றும் 30 வருடகால ஆயுத போராட்டம் ஆகியவற்றை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்தது என குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை