ஹிக்கடுவ எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட படப்பிடிப்பு இடம் : நடிகர் ரியான் ரெனால்ட்ஸ்
ஹிக்கடுவ எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட படப்பிடிப்பு இடம் என கனடிய-அமெரிக்க நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனை, லண்டனை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் படமாக்கப்பட்ட தனது முதல் திரைப்படமான “ஆர்டினரி மேஜிக் 1993” பற்றி நடிகர் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை அகீல் சிர்ராஜ் என்ற நபர் சமூக ஊடகங்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் எனது முதல் திரைப்படத்தை இலங்கையில் ஆரம்பித்தேன். இந்த அனுபவம் கவர்ச்சியானது மற்றும் புதிய எல்லைகளுக்கு என் மனதைத் திறந்தது” என்று நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் கூறினார்.
ரியான் ரெனால்ட்ஸ் அமெரிக்கா திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவையாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார்.
கருத்துக்களேதுமில்லை