சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சி: இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால் ஏற்பட்ட நட்டம்
கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால், இலங்கைக்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, கண்காட்சிக் கூடங்களைத் தயாரிக்க 72 லட்சம் ரூபாக்களை செலவிட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை