தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை

கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.