பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட சலுகை! இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட சலுகை வழிமுறைகள் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல், மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இந்த திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.
இந்த சலுகைகள், சுற்றுலாத் துறை, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழிநுட்பம், ஏற்பாட்டுச்சேவை வழங்குநர்கள், போக்குவரத்து, பாடசாலை வான் சேவை வழங்குநர்கள், பார ஊர்திகள், சிறிய பொருள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பஸ்கள் அத்துடன் தனியார் துறை ஊழியர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட துறைகளின் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை