நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதி வரி கிலோ கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாவாக குறைப்பு!

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் , நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ பெறுவதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதிக்கே இந்த வரி விலக்கு பொருந்தும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.