கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழப்பு!

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனக் கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதான நபராவார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் சிறைச்சாலைக்கு சற்று தொலைவில் உள்ள மாநகரசபை கட்டடத்துக்கு அருகில் உள்ள காணியில் வீழ்ந்து காணப்பட்ட நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.