சர்வதேச வான்பரப்பில் பெண் விமானிகளுடன் பறந்த இலங்கை விமானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை கௌரவிக்கும் முகமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சிறப்பு சேவையொன்றை வழங்கியுள்ளது.

அந்த வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் புதன்கிழமை பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த விமான சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருச்சி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் கெப்டனாக சாமிக்கா ரூபசிங்க செயற்பட்டமையுடன், விமானிகளாக பிமலி ஜயவர்தன மற்றும் ரொஷானி திஸாநாயக்க ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

அத்துடன், உபுலி வர்ணகுல பணிக்குழாம் மேற்பார்வையாளராகவும், லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் விமான பணிப்பெண்களாகவும் செயற்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.