கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்? புத்திக பத்திரன சந்தேகம்!

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுடனான மோதலின் போது, பொலிஸாரின் கண்ணீர்ப்புகை பிரயோகம் அந்தப்பகுதியை நிரப்பியதுடன் அருகில் உள்ள பாடசாலைகளும் பாதிக்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரியுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.