வாக்குச் சீட்டுகளை விரைவில் வழங்க முடியும் என நம்பிக்கை!
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை ஐந்து நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச் சீட்டுகளை இருபது முதல் இருபத்தைந்து நாட்களுக்குள்ளும் விநியோகிக்க முடியும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அச்சிடுவதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சின் செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் தேவையான அனைத்து விபரங்களையும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற கோரிக்கையை அடுத்து, தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் என தேர்தல்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான எரிபொருளை வழங்குவது தொடர்பில் விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தாமதமான காலத்திற்கு மாத்திரமே வழங்க வேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை