தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்ற நிலையில், இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இம்மாத தொடக்கத்தில் 184,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 143,400 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை