யாழில் முதலுதவி செயன்முறை பயிற்சி நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை செங்சிலுவை சமூகத்துடன் இணைந்து முதலுதவி செயன்முறை பயிற்சி நெறியினை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அண்மையில் ஆரம்பித்தனர்.

இவ் முதலுதவி பயிற்சியின் போது பாடசாலைகளிலும் ,சமூகங்களிலும் ஏற்படுகின்ற மருத்துவ அவசர நிலைமைகளில் முறையான மருத்துவ உதவி கிடைக்கப்பெறும் வரை எவ்வாறு அதனை கையாளுதல் தொடர்பான செயன்முறை விளக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் தன்நம்பிக்கையுடையவர்களாகவும் ,நற்சுகாதார பழக்கவழக்கங்களை தெரிந்தவர்களாகவும்,அவசர நிலமைகளில் உதவும் மனப்பாங்கை பெற்றவர்களாகவும் உருவாக்கப்படுவார்கள்.

இப் பயிற்சி நெறியானது பொது வைத்திய நிபுணர் வைத்தியர் க.சத்தியமூர்த்தி,மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் பகீரதன், வல்வெட்டிதுறை பிரதேச வைத்தியசாலை பெறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வே.கமலநாதன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிராந்திய இணைப்பாளர். வைத்தியர் வி.தர்ஷன் மற்றும் இலங்கை செங்சிலுவை சமூகத்தினரகன் பங்கு பெற்றதலுடன் இடம் பெற்றது.

இதற்கு பிரதான அணுசரனையை நெல்லியடி மெடிக்கல் சென்ரர் வழங்கியிருந்தது. அதன் நிறுவுனரால் முதலுதவி பெட்டியொன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இவ் முதலுதவி பயிற்சி நெறியானது ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.