பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி கனடா வருகின்றார்.
பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் ஈஸிஎன்டடைமன்ட் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார். உறவுகள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கஸ்தூரி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்து பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.
சத்தியராஜ், விஜயகாந்த், செல்வா, ரமேஸ் அரவிந்த், பிரபு, வினித், ஜெயராம், சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நாயகியாக நடித்த கஸ்தூரி அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் உடன் நடித்து பெரும் புகழைப் பெற்றார்.
கருத்துக்களேதுமில்லை