நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை – அமைச்சர் அலி சப்ரி
நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான ஆதரவை, பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
இணையவழி ஊடாக நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் 19வது அமைச்சர்கள் கூட்டத்தில், உரையாற்றிய போதேவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ஆசியாவை நோக்கி நகர்வதால், பிம்ஸ்டெக் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூறுகள் தொடர்புடையதாக இருப்பதற்காக புத்துயிர் பெற வேண்டும்.
அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அனைவருக்கும் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்காக, உள்ளகப் பிராந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முழுமையான ஆதரவையும் வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்லாந்தின் தலைமைத்துவத்தின் கீழ், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை