இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாவுக்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாகவே இருந்தது. ஆனால் கடந்த 3 நாள்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக சரிந்தது.

டொலரின் பெறுமதி மேலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களது டொலர்களை மாற்றிக் கொள்ள வரிசையில் நின்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கடந்த மாதங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே, டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

பணப்பரிமாற்றம் செய்த பின்னர், ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் கோரப்பட்டன.

மேலும், இதை விடவும் அதிக பெறுமானத்துக்கு டொலரை மாற்றிக் கொள்வதற்கு பலர் வௌ;வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.