வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகன் தற்கொலை
வவுனியாவில் பிரபல வைத்தியர் ஒருவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (10) பதிவாகியுள்ளது.
நேற்று மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26 வயதான இளைஞர் என்றும் அவர் 2016ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ எடுத்து, மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று, மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மைக்காலமாக வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
கருத்துக்களேதுமில்லை