அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இராகலையில் போராட்டம்

அந்துவன்)

பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா – இராகலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கண்டி சமூக அபிவிருத்தி ஸ்தாபனம், ராகலை நகர் பெண் சிவில் அமைப்புகள் மற்றும் பெருந்தோட்ட பெண்  தொழிலாளர்கள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இராகலை நடுக்கணக்கு தோட்ட பிரிவிலிருந்து ஆரம்பமான பேரணி, ராகலை நகர் வரைவந்து, அங்கு கூட்டம் நடத்தப்பட்டது. தமது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் பங்கேற்றோர் நகரை நோக்கி வந்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.

அதேபோல பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.