கரப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் காயம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியினையடுத்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 மாணவ, மாணவிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் என்பவற்றுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டியில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஒரு பிரிவினரால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் மூன்று மாணவர்களும் நான்கு மாணவிகளும் காயடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போட்டி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை