பனாகொட இராணுவ முகாம் சிப்பாய் துப்பாக்கி, தோட்டாக்களுடன் மாயம்!
பனாகொட இராணுவ முகாமிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்களை திருடிய இராணுவ சிப்பாய் ஒருவரை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் துப்பாக்கியுடன் கொடகமவில் உள்ள விஹாரை ஒன்றுக்கு சென்றிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
குறித்த ஆலயத்துக்குச் சென்ற இராணுவச் சிப்பாய் விஹாராதிபதியிடம் துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு ஒரு பையை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை