பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!
அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைவாக இன்று முதல் நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளோம். மேல், தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சுகாதார நிலையங்கள் வைத்தியசாலைகள் உட்பட சகல மருத்துவ சேவை நிலையங்களில் உள்ள வைத்தியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை (13) காலை 8 மணிமுதல் ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை மற்றும் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளும் வெறிச்சோடியிருந்தன.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள் முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட அதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.
வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்துக்களேதுமில்லை