புதையல் தோண்டுவதற்கு முயன்ற 7 பேர் கைது
குருநாகல், நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் மூலம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 41 வயதுடைய நாவல, பொரளை, வதுரம்ப, வாத்துவை மற்றும் மடபான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் மஹவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை