முடிந்தால் நடவடிக்கை எடுத்து பாருங்கள்! கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்க தலைவர் சவால்
வர்த்தமானி அறித்தல்களை வெளியிடுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை.
முடிந்தால் நடவடிக்கை எடுத்து பார்க்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட காரணத்தால் பணிகளில் ஈடுபடவிருந்த பணியாளர்களும், பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளித்தனர்.
வாழ்வதற்கு பொருத்தமான சம்பளம் மற்றும் நிவாரணங்களை கோரியே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை