ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா இசைச்சங்கமம் 2023

கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் வீணை இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. மிக நீண்ட காலத் திற்குப் பின்னர் கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்கள் கனடாவில் கலந்து நிகழ்ச்சி இதுவாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக இடையுறு இன்றியும் தடையுறு இன்றியும் வெளி வந்து கொண்டிருக்கும் உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை கடந்த 3 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட கொரானா என்னும் கொடிய நோய்த் தாக்கத்தி னால் ஏற்பட்ட பொருளாதார சரிவும் நெருக்கடியும் காரணமாக பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது. குறிப்பாக விளம்பரம் தருகின்ற வர்த்தகர்களின் வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு எமக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது அனைத்து ஊடகத்துறையினரு க்கும் முன்னால் உள்ள சவால்கள் ஆனாலும் எமக்குஅதுவொரு பெரும் தாக்கமாகும். காரணம் நாம் இன்றும் தாயகத்திலும் கொழும்பிலும் செய்தி யாளர்களை வைத்து ஊதியம் வழங்கியே செய்திகளைப் பெற்று வருகின் றோம் அதனாலேயே இன்றும் எந்தச் செய்தியையும் முந்தித் தருகின்ற ஊடகமாக ஈழநாடு விளங்குகின்றது என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது திண்ணம்.
இந்தப் பொருளாதார நெருக்கடியைச் வெற்றிகரமாக கடந்து ஈழநாடு தொடர்ந்து பயணிக்க வாசகர்களாகிய நீங்கள் தான் கை கொடுக்க வேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படை யிலேயே 30வது ஆண்டு விழா நடை பெறவுள்ளது.
எமது இனிய வாசகர்கள், அபிமானிகள், கலா ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றேன்.
இவ்வாண்டு மண்டபத்தின் இருக்கைகளின் நம்பர்கள் நுழைவுச் சீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே அன்புள்ளங்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல முற்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
416 841 9600 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.