வீடு ஒன்றில் கொள்ளையிட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
சீதுவை, கொடுகொட பிரதேச வீடு ஒன்றில் 32 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை ஆராய்ந்ததில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிரிஹான தலைமையக பொலிஸில் கடமையாற்றியவராவார்.
கருத்துக்களேதுமில்லை