மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் மூவர் கைது
மாளிகவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர். பீ. தோட்டதிற்கு அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவார்களில் ஒருவரிடமிருந்து 5 கிராம் 630 மில்லி கிராமும், ஏனைய இருவரிடமிருந்து தலா 5 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 34,40,45 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் கொழும்பு -14 பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (17) மாளிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருத்தனர்.
கருத்துக்களேதுமில்லை