யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை செய்ததில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெற்றோரின் அதீத மத நம்பிக்கை காரணமாக புற்றுநோய்க்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் கடந்த வருடம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.

அந்நிலையில், பெற்றோர் கோப்பாய் பகுதியில் உள்ள மத வழிபாட்டு இடத்திற்கு சென்று தமது பிள்ளைக்காக பிரார்த்தனை செய்தனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள், வைத்தியத்தால் பிள்ளையை குணமாக்க முடியாது எம்மிடம் அழைத்து வாருங்கள் பிரார்த்தனைகள் மூலம் குழந்தையை குணமாக்கலாம் என பெற்றோருக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர்.

அதனை அடுத்து பெற்றோர் தமது பிள்ளையை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்து செல்ல போவதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பொய் கூறிவிட்டு, பிள்ளைக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காது, மத வழிபாட்டு தலத்திற்கு அழைத்து சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு வருட காலத்திற்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுவனுக்கு நோயின் தன்மை தீவிரமாகி வயிறு வீங்கி உணவு உண்பதனை குறைத்துள்ளான். அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.