சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு – ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளது என்ன?
சர்வதே நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி குறித்த அறிவிப்பினால் நிம்மதியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை சாத்தியமாக்குவதற்கு ஜனாதிபதி வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு அரசியல்வேறுபாடுகளிற்கு அப்பால் பாராட்டப்படவேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் திறைசேரி செயலாளர் ஆகியோரின் தொழில்சார் திறனையும் அவர் பாராட்டியுள்ளார்.
முன்னர் பதவியில் இருந்தவர்கள் இதனை செய்திருந்தால் எங்கள் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் அதிகவேதனைகளை அனுபவிக்காமல் இதிலிருந்து மீண்டிருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பிடிவாதம் எங்களை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் முன்னோக்கி சிந்திப்போம் கடன்மறுசீரமைப்பு என்பது கடினமானதாக காணப்படும் சீர்திருத்தங்கள் அவசியமானவை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை