அத்திமலை பிரதேச பாடசாலை ஒன்றின் 4 மாணவிகளிடம் நிர்வாணத்தைக் காட்டிய ஆசிரியையின் கணவர் கைது!
அத்திமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்கு மாணவிகளிடம் தனது நிர்வாணத்தைக் வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் கணவர் என தெரிய வருவதாக கூறப்படுகிறது.
நான்கு மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
சந்தேக நபரிடம் அத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை