கல்கிஸ்சை பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு ; 6 பேர் கைது

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுடைய வீரகெட்டிய, நீர்கொழும்பு, அம்பலாங்கொடை ஹாலிஎல, பொலன்னறுவை மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.