சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது! ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறுகிறார்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் இ 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமைஇ கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு இ எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏனைய சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பெற்றுக் கொள்ளப்பட்டால் அது மத்திய வங்கியின் கையிருப்பில் காணப்படும்.

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும். கடந்த வியாழனன்று முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றது.

இதனை செலவிடும் போது மத்திய வங்கியுடன் பேச்சுகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியுள்ளது.

கடன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். கடந்த காலங்களில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாம் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொண்டோம்.

அதற்கமைய இந்தியாவிற்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையில் முதற்கட்டமாக 121 மில்லியன் டொலர் மீள செலுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் இ எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையைக் காப்பாற்றுதல் என்வற்றில் இது தாக்கம் செலுத்துகிறது.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

இதன் போது சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும் இ வாக்கெடுப்பில் பங்குபற்றவும் முடியும்.

தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை இ தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பார்களானால் மிக இலகுவாக எதிர்க்கட்சிகளால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.