ஹயஸ் மரத்துடன் மோதியது சாரதி பலி; மிருசுவிலில் சம்பவம்!
ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்டதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி மிருசுவில் ஏ 9 வீதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் விசுவமடு மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசாமி கஜீபரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாகன திருத்த வேலைகளை முடித்துக் கொண்டு விசுவமடு திரும்பிய வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை