தென்னாபிரிக்காவின் பிரதி உயர்ஸ்தானிகராகும் இந்திய உயர்ஸ்தானிகரக அரசியல் ஆலோசகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட பாணுபிரகாஷ் தென்னாபிரிக்காவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அரசியல் பிரிவு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்ட அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பதவியில் கடமையாற்றியிருந்தார்.

2006 ஆம் ஆண்டு இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து கொண்ட அவர் தனது 17 வருட சேவைக்காலத்தில் அடையும் அதியுயர்ந்த பதவியாக மேற்படி பிரதி உயர்ஸ்தானிகர் பதவி காணப்படுகின்றது.

இவ்வார இறுதியில் அவர் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லவுள்ளதுடன் தென்னாபிரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அடுத்தவாரம் பிரதி உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.