ஆரம்ப சுகாதார துறைகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, அடுத்த சில வருடங்களுக்கு நாட்டில் ஆரம்ப சுகாதார துறை மற்றும் ஏனைய சுகாதார துறைகளை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் ஷிக்சின் சென் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிலிப்பைன்ஸ் – மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், இலங்கைப் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததுடன், இலங்கையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தங்களால் இயன்ற உயர் மட்ட ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.