எழுத்தாளர் கவிச் சுடர் சிவரமணியின் ‘நவீன சீதை’ சிறுகதைநூல் அறிமுகம்!
எழுத்தாளர் கவிச்சுடர் சிவரமணியின் ‘நவீன சீதை’ என்ற சிறுகதை நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை ‘யாழ் களரி’ அரங்கில் மாலை 4.30 மணியளவில் கலைக்குரல் ஜோர்ஜ் ஜெஸ்ரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பண்பலை வேந்தன் முகுந்தன் சுந்தரலிங்கம் அறிமுக உரையை நிகழ்த்தினார். எழுத்தாளர் செ. யோசப் பாலா சிறப்புரை வழங்கினார். யாழ் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை உதவி விரிவுரையாளர் முருகையா சதீஸ் நூல் நயவுரை நிகழ்த்த, தமிழ்நாடு பட்டிமன்ற நடுவரும் பல்கலைக் கலைஞருமான நெல்லை.பி.சுப்பையாவிடமிருந்து நெய்தல் நிலமகன் க.திருவம்பலம் முதற்பிரதி பெற்றார்.
கருத்துக்களேதுமில்லை